மனதுக்குள் ஒரு சஞ்சலம்...குறை.
உங்களிடம் சொல்ல முடியாத சில அந்தரங்கஙகளை என் உயிர் நண்பன்
அசோக்கிடம் சொல்கிறேன்.
ஆபிஸ் கென்டீனில் வைத்து அசோக்கை சந்தித்தேன்
.
_ அசோக் "என்னடா?"வென்று நிமிர்ந்தான்.கையில் இருந்த காபி கோப்பையை மொசைக் மேசையில் வைத்துவிட்டுக் கேட்டான்."ஏண்டா முகம் வாடிப்போயிருக்கு?"
நான் மென்மையாக - விரக்தியாகப் புன்னகைத்தேன்
.
" ஏன்?" அவனாகவே மீண்டும் கேட்க,
- மவுனமாயிருந்தேன்.
" ஏன்... வீட்டுல மனைவிகூட ஏதாவது பிரச்சினையா...?"
' சீச்சீ... அப்பிடியொன்னுமில்ல...ஆனால்..."
" ஆனால்... வாட் யூ மீன்?"
" கல்யாண்ம் ஆனதிலிருந்து மனசு சரியில்லடா...இப்போ ஆறு மாசமா மனசுக்குள்ள எரிஞ்சிட்டிருக்கேன். ஐ மீன் செக்ஸ்... மனைவியோட கட்டில் சுகம் திருப்தி தரல்ல..."
-அசோக் புரியாமல் மவுனமாகப் பார்த்தான்.
நானும் அவனையே பார்த்து... சொன்னேன்.
" என் பொண்டாட்டி ம்காலட்சுமி மாதிரி நல்ல அழ்கு...உன்க்குத் தெரியுமே...குண்த்திலேயும் சொக்கத் தங்கம்டா ...ஆனால் அவளோட அணைப்பு,சுகம் மட்டும் ஏனோ எனக்குத் திருப்தியாயில்ல்...அவளுக்குத் தாம்பத்தியத்தில ஈடுபாடு இல்லையோன்னு தோணுது."
அசோக் சிகரட் பற்ற வைத்து,அதன் நிக்கோடின் புகையை ஒரு இழுப்பு இழுத்து மீண்டும் மவுனமாக நெற்றி வருடி யோசித்தான்.
" சரி...ஒரு வெரைட்டி வேணும்...வீட்டு சாப்பாடு ருசிக்கல்லேன்னா கடையில சாப்பிடுறது மாதிரி...ஒரு நாளைக்கு நீயும் வெளியில சாப்பிட்டுப் பாரேன்."
நான் நெற்றியில் வியர்த்து...அதிர்ந்து கேட்டேன்." வாட்?"
" இன்னைக்கு சாயந்திரம் நான் உன்னையோர் விடுதிக்குக் கூட்டிட்டுப் போறேன்.அப்புறம் என்னன்னு பார்க்கலாம்."
" யூ மீன் ப்ரெஸ்டிடியூஷன்..?"
அசோக் " யெஸ்" என்று தலையாட்டினான்.
............-------------..............------------.................
இதமான மாலை நேரம்,
-நானும் அசோக்கும் ஊருக்கு ஒதுக்குப் புறமாகயிருந்த அந்தத் தனி பங்களாவுக்குள் நுழைந்ததும்,அங்கிருந்த ஷகீலாத் தனமான குண்டு மாமி அசோக்கை வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள்.அந்த வரவேற்பிலேயே அசோக்குக்கு அங்கே ஏற்கனவே பரிச்சயமும் நிறையப் பலான அனுபவமும் இருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
சம்பிரதாயங்கள் முடிவடைந்து,பெண்களின் புகைப்படம் பார்த்து,பணம் கொடுத்து... அசோக் வரவேற்பறையில் காத்திருக்க,குண்டு மாமி காட்டிய அறைக்குள் நுழைந்தேன்.
உடம்பு படபடத்தது.
காத்திருக்க ஆரம்பித்தேன்.
புதிய அனுபவம்...அதிலும் தப்பான - தவறான அனுபவம்.
மனசு பூராவும் குறுகுறுத்தது.
யோசிக்க ஆரம்பித்தேன்.
விபச்சாரிகள் உருவாவதில்லை.சூழ்நிலைக் கைதிகளாக உருவாக்கப்படுகிறார்கள் என்பதே என் எண்ணம். காத்ல் தோல்வி,காதலன் ஏமாற்றிக் கைகுழந்தையோடு விட்டுச் செல்லல்,நோயாளி அம்மாவும் வய்துபோன அப்பாவுமாக மருந்து வாங்கக்கூட காசில்லாத குடும்பம்,அக்காவின் கல்யாண இழுபறி,சீதனக் கொடுமை,குடிகாரக் கணவன்,சமூக ஏமாற்றம்...இப்படியாக விலைமாதர்கள் தமக்குள்ளொரு கதை வைத்திருப்பதை சினிமாக்களும் நாவல்களும் எத்தனை விவரித்திருக்கின்றன.
என்றாலும்,
எங்கேயோ பிறந்து வளர்ந்து யாரென்று முகவரியறியாத ஒரு பெண்ணுடன் இன்று உறவு வைத்துக்கொள்ள வேண்டிய நிலையில், அறிமுகமேயில்லாத இப்பெண்ணின் கதை என்னவாகயிருக்கும்?
- கேட்டுப் பார்க்க வேண்டும்.
பாவ்ப்பட்ட புதிய இடம் மனதுக்குள் பயத்தையும் ஏற்படுத்த,
சாத்தியிருந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்தாள் அவள். நான் இதுவரை எதிர்பாத்திருந்தவள். புகைப்படம் பார்த்துத் தேர்ந்த சில மணிநேர வாடகைப் பெண். இருபத்தியைந்து வயதுக்குள் உடம்பு முழுக்க இளமையையும் செழுமையையும் பத்திரப் படுத்தியிருந்தாள். சினிமாவில் மட்டும் வாய்ப்புக் கிடைத்திருந்தால்...நிச்சயமாக இன்னுமொரு குஷ்புவாக ரசிகர்களைக் கோவில் கட்ட வைத்திருப்பாள்.
விபச்சாரியாக ஆக வேண்டுமென்பது இவள் விதி{?}
- கதவைத் தாளிட்டு வந்தவள்,கட்டிலில் என்னை உரசி அமர்ந்து கொண்டாள்.
என் ந்ரம்பு நாளங்கள் சூடேறின.
இப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள் போலும்...ஷாம்பு வாசனையுடன் சேர்ந்த பெர்பியூம் கலவையும் மெல்லிய சேலை தாண்டியிழுத்த மேனியழகும் கிறங்கடித்தன. அவளது அண்மையில் என் முகத்தில் வியர்வை முத்துக்களை உணர்ந்தேன்.
அவளாகவே அவசரப்பட்டு என் சேர்ட் பட்டன்களைக் கழற்ற எத்தனிக்க...தடுத்தேன். "ஏன் இந்த அவசரம்? கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமே..."
- அவள் விஷமமாகப் புன்னகைத்தாள்.
" உன் பெயர் என்ன்?" - கேட்டேன்.
" அஞ்சு " என்றாள் பிஞ்சுக் குரலில்.
" முதல் அனுபவமா?" என்றாள்.
" ஆம் " என்றேன்.
அவள் மீண்டும் புன்னகைத்தாள்.
" நீ ரொம்ப அழகாயிருக்கே...படிச்ச பொண்ணு மாதிரியும் தெரியுறே...அப்போ ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தே..."- கேட்டேன்.
அவள் கலகலவெனச் சிரித்தாள். என் கழுத்தில் அவள் கரங்களை மாலையாகப் போட்டுக்கொண்டாள். " இது என் தொழிலில்ல.ஏன்னா...கோடிகள், ஏழு தலைமுறைச் சொத்துக்கள்னு நான் வசதியா வாழ்றவ...டைல்ஸ் பாக்டரி மட்டும் ரெண்ணு இருக்கு..."அவள் சொல்லிக் கொண்டே போக,
நான் திக்கென்று அதிர்ந்தேன்.
" அப்போ ஏன்?"
" என் புருஷன் கூட செக்ஸ் வெச்சிக்கிறதில திருப்தியில்ல. அதான் இங்கே ஒரு சேஞ்சுக்காகவும் உடம்போட தேவைக்காகவும் வந்துட்டேன். இதை நடத்துறவங்க எனக்குத் தெரிஞ்சவங்க"
என் மூளைக்குள் பொறி தட்டியது. விழிகளுக்குள் என் மனைவியின் நிழல்ரூபம் தெரிந்தது.
" என்ன சொல்ற நீ...உன் புருஷன்..." - தடுமாறினேன்.
அவளது விழிகளில் தாபம். ஏக்கமும் எதிபார்ப்புமாகச் சொன்னாள் " என் புருஷனுக்கும் உங்க வயசிருக்கும்...பிசினஸ் பிசினஸ்னு உலகம் சுற்ற மட்டுமே அவருக்கு நேரமிருக்கு...சிலவேளை என்கூட இருந்தாலும் ஏதோ கடமைக்கு மாதிரியான அவரோட செக்ஸ் நாட்டம் எனக்குத் திருப்தி தரல்ல.சந்தோசம் தரல்ல.அதான் புது அனுபவம் தேடி இங்கே வந்தேன்."
அவள் சொல்லி முடிப்பதற்குள்...
நான் அவளது கரங்களைத் தட்டிவிட்டு,சடாரென்று எழுந்து,வாசலை நோக்கி நடந்து... அவள் என் பின்னாலேயே அதிர்ச்சியாய் ஓடிவர...கதவைத் திறந்துகொண்டு வெளியேறினேன்.
வரவேற்பறையில் இருந்த அசோக்கும் அதே அதிர்ச்சியோடு ஓடிவந்து பதறியவனாகக் கேட்டான் " என்னடா பேய் பிடிச்சவன் மாதிரி ஓடிவர்றே..."
நான் அவனையும் இழுத்துக்கொண்டு வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். தெளிந்திருந்தேன்.நிரம்பவும் தெளிந்திருந்தேன்.
ந்ண்பனைப் பார்த்துச் சொன்னேன்.
" மனைவியோட சுகம் திருப்தி தரல்லேன்னு நான் புதுச்சுகம் தேடி இங்கே வந்திருக்கேன்.இதேநேரம் அவளை என்னால திருப்திப்படுத்த முடியல்லன்னா அவள் எங்கே போவாள்டா...?ஏன் நான் யோசிக்க மறந்துட்டேன்... என் மனைவி எனக்கு மட்டுமே மட்டும்னு நான் எதிர்பார்க்கிற மாதிரி நான் சுத்தமாக இருக்கணும்னு அவளும் எதிபார்க்கலாமில்லையா...சொல்லு அசோக்..."
வார்த்தை வராமல் என் நா தழுதழுக்க -
அசோக் என்னைப் பெருமிதத்தோடு பார்த்தான்.
பார்த்துக்கொண்டேயிருந்தான்.
[யாவும் கற்பனை]
ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
15.01.1995

1 comment:
நல்ல கதை!
Post a Comment