
ஒரு போர்வீரனாகக்கூடிய- போர்வீரனுக்குரிய அத்தனை தகுதிகளும் எனக்கிருக்கின்றனவே...போராட்டகுணம் உட்பட...அப்போ நான் ஏன் ஆர்மியில் சேரக்கூடாது?
- கொஞ்சம் நாட்களாக எனக்குள் விஸ்வரூபித்துப் பரவிப்போயிருக்கின்ற யதார்த்தபூர்வமான நினைப்பு இது.
தற்போதெல்லாம் நினைத்த நேரம் தம் படைகளுக்கு ஆள் சேர்க்கும் இலங்கை அரசு என்னை மட்டும் ஏற்றுக்கொள்ளாதா என்ன?
இருபத்தியைந்து வயதில், ஆறடி உயரத்தில், பரந்த மார்பையும் முறுக்கேறிய கரங்களையும் வலுவான தோள்களையும் கொண்ட திடகாத்திரமான உடம்பு எனக்கு.
தெளிவான கண்பார்வை... கூர்மையான செவிப்புலன் தவிர பீஏ படிப்பு. மரதன், சைக்கிளோட்டம், நீச்சல், புட்பால் என அத்தனை விளையாட்டுக்களிலும் ஈடுபாடு. இவற்றுக்கப்பால்....அதிக போர்வீரர்களுக்கு இல்லாததோர் அடிஷ்னல் குவாலிபிகேசன் என்னவென்றால்...நான் விரும்பும்- என்னை விரும்பும் கவிதைகள் அடங்கிய இலக்கிய வெறி.
தெளிவான கண்பார்வை... கூர்மையான செவிப்புலன் தவிர பீஏ படிப்பு. மரதன், சைக்கிளோட்டம், நீச்சல், புட்பால் என அத்தனை விளையாட்டுக்களிலும் ஈடுபாடு. இவற்றுக்கப்பால்....அதிக போர்வீரர்களுக்கு இல்லாததோர் அடிஷ்னல் குவாலிபிகேசன் என்னவென்றால்...நான் விரும்பும்- என்னை விரும்பும் கவிதைகள் அடங்கிய இலக்கிய வெறி.
................................................................
"நான் ஆர்மியில் சேரப்போறேன்..."
- என்றதும் என் பெற்றோர் என்னைப் புழுவாகப் பார்ப்பார்கள் என நான் நினைக்கவில்லைதான்.அவர்களது முகத்தில்அப்படியொரு அதிர்ச்சி கலந்த பயம் எழுமென்று நான் எதிர்பார்க்கவும் இல்லைதான்.
என்றாலும்...
என்றாலும்...
அவர்களுக்குள் ஒரு கசப்பான சோகம் படிவதை என்னால் உணர முடிந்தது.
உம்மா சோபையிழந்து போன தன் முகத்தில் சுருக்கங்களைக் கொணர்ந்து.... கண்களை அகல விரித்துப்பார்க்க,
உம்மா சோபையிழந்து போன தன் முகத்தில் சுருக்கங்களைக் கொணர்ந்து.... கண்களை அகல விரித்துப்பார்க்க,
சமையல் கட்டோரமாய் ஒட்டியிருந்த பாத்ரூம் வாசலுக்கு அண்மித்து, சுவரில் தொஙகிய ரசம்போன கண்ணாடியில் முகம் பார்த்து சவரம் செய்துகொண்டிருந்த வாப்பா திடுமென் நிமிர்ந்து " ஹூவ் " எனத் தடுமாறினார்.
அவர் தாடையில் பிளேட் கீறியதில் கோடாய் ரத்தம் வழிந்தது.
"என்ன சொன்னே? " வாப்பா கேட்க...
-நான் தடுமாறினேன்.அவர் தாடையில் பிளேட் கீறியதில் கோடாய் ரத்தம் வழிந்தது.
"என்ன சொன்னே? " வாப்பா கேட்க...
" இவனுக்குப் பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிருக்கு போல...பெரிய்ய இவரு... ஆர்மியில சேரப் போறாராம் " உம்மா மெல்லமாய்ச் சொல்ல...நான் மவுனமாயிருந்து பின் சொன்னேன்.
"நானும் பீஏ முடிச்சு ஒரு வருஷமாச்சு. இன்னும் வேலை கெடைக்கல, எந்தத் தொழிலுமே கெடைச்சபாடில்ல. என்ன பண்றது... வீட்டுல உட்கார்ந்து தண்டச்சோறு சாப்பிட்டு... எத்தனை நாளைக்கும்மா... ஏண்டா பொற்ந்தோம்னு எல்லாமே வெறுத்துப்போச்சு. அதான்... ஆர்மியில ஆள் எடுக்கிறானாம்... பேப்பர்ல பார்த்தேன். எழுதிப்போடலாம்னு...'
உம்மா மீண்டும் பயத்தில் தடுமாறினாள்.
வாப்பா சுள்ளென்று வார்த்தைகளைச் சீறினார்.
" உனக்கு சாகணுமனா எங்கேயாவது கிண்ற்றிலேயோ குளத்திலேயோ விழுந்து செத்துப்போ. தவிர...கை காலில்லாம முண்டமா ஏண்டா சீரழியணும்...எதற்குடா இந்த விபரீத ஆசையெல்லாம்...தொழில் செய்யப்போறானம் தொழில்...அது கிடைக்கிற் நேரம் கிடைக்கட்டும். அதுவரையில பேசாம வீட்டிலேயே இரு..."
வாப்பாவின் கண்களில் தெரிந்த கொவ்வைச் சிவப்பை எதிர்கொள்ள முடியாமல் மவுனமாய் நான் என் அறைக்குள் நடந்தேன். வாப்பாவை எதிர்த்து வாதிடக்கூடிய தைரியம் எனக்கில்லை. மரியாதை கற்றுத்தந்த பாடமது.
உம்மா என் பின்னாலேயே வந்தாள்.
" டேய்...டேய் இந்த விபரீதமான ஆசையெல்லாம் வேண்டாம்டா... ஆர்மிக்காரங்க குடும்பமே இன்னைக்கு வயித்துல நெருப்பைக் கட்டிட்டிருக்காங்க. அதெல்லாம் நம்ம நாட்டில உயிர்ப்பலியெடுக்குற தொழிலாப்போச்சு. வேணாம்டா... பட்டினி கெடந்தாலும் இந்த ஆர்மித் தொழிலுக்குப் போக நெனைக்காதேடா... உன்னை அங்கே அனுப்பிட்டு நானும் வாப்பாவும் மனம் வெந்து இங்கே சாகணுமா என்ன... வேணாம்டா..."
உம்மாவின் கண்களில் கண்ணீர் மழை.
என் மனதுக்குள் ஏதோ அடைத்தது.
என் மனதுக்குள் ஏதோ அடைத்தது.
" த்த பாரு நீதான் கதை கவிதை இலக்கியம்னு பேப்பருக்கெல்லாம் எழுதுவியே... அந்த மாதிரியேதாவது ஒரு கம்பனியில கெளரவமானதொரு தொழிலைத் தேடிக்க மவன்... ஆர்மியெல்லாம் மறந்துடுடா...'
உம்மா சொல்லிக்கொண்டே போனாள்.... பத்திரிகைத்தொழில் இன்று இராணுவ வாழ்க்கையை விடவும் ஆபத்தானது என்பதை அறியாமல்.
எப்படியோ,
தாயின் பாசம் என்னைக் கொஞ்சம் அடங்கச் செய்தது.
...............................................
சரியாக மூன்று வாரம் கழிந்து ஒரு மதிய நேரம்.
"எனக்கு கொழும்பில பேபபர்க் கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு. நாளன்னைக்கு வேலைக்கு வரச்சொல்லி தந்தி அனுப்பியிருக்காங்க...' என்ற என்னை, சாப்பிட்டுக் கொண்டிருந்த வாப்பாவும், பரிமாறிக் கொண்டிருந்த உம்மாவும் ஆச்சர்...யமாகப் பார்த்தார்கள்.
தந்தியைக் காட்டினேன்.
உம்மாவின் கண்களில் பளீர் என்று ஒளிப்பிரவாகம்.
வாப்பாவின் முகம் முழுக்கச் சந்தோசச் செழுமை.
வாப்பாவின் முகம் முழுக்கச் சந்தோசச் செழுமை.
என் மனதுக்குள் ஒரு போர் வீரனின் உற்சாகம்.
_வாப்பா சாப்பிடுவதை நிறுத்தி,தந்தியை வாங்கிப் பார்த்துவிட்டுச் சொன்னார்.
"ரொம்பத் திருப்தியா சந்தோசமா இருக்குடா... பயண் ஏற்பாடுகளைக் கவனி மகன்"_நா தழுதழுத்தது.
நான் அறையை நோக்கி நடக்க, வாப்பா உணர்ச்சி ததும்ப உம்மாவிடம் தொடர்ந்து சொல்வதையும் செவிமடுத்தேன்.
"செய்னம்பு... நமக்கு ஒரே புள்ள... அவனும் தூரமாகப் போறான்... கொழும்புக்கு. பிரிவு கஷ்டம்னாலும்... ஆம்புள்ப் புள்ளைக்கு தொழில் முக்கியம்ல. இரவைக்கு கோழிக்கறியாக்கி அவனுக்கு விருப்பமான இடியப்பம் அவிச்சுக்கொடு செய்னம்பு..."
நிச்சயம் செய்னம்பு என்கிற என் உம்மாவுக்கு கையும் ஓடாது...காலும் ஓடாது.சநதோசத்தில்...
....................................................
மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டுக்கொண்டிருந்தபோது உம்மா அரக்கப் பரக்க என்னை எழுப்பினாள். பகல் கனவு களைந்து நான் சுதாகரித்து எழ... உம்மாவின் முகம் முழுக்க ஒருவகைப் பீதி படிந்து, வியர்த்துக் கருத்திருந்தது. கட்டிலோரம் அமர்ந்து என் தலை தடவிக் கேட்டாள். சுருதியேயில்லாமல்....
"உனக்கு பேப்பர்க் கம்பனியில என்ன வேலை கிடைச்சிருக்கு மவன்?"
"ஜர்னலிஸ்ட்"
"அப்படீன்னா...?""ஜர்னலிஸ்ட்"
"பத்திரிகையாளன்'
"ஐய்யய்யோ..." உம்மா பதறினாள்.
"ஏன்மா?"
"ஐயய்யோ... உனக்கு இந்தப் பேப்பர்காரத் தொழிலும் வேணாம். ஆர்மித் தொழில் மாதிரி இதுவும் ஆட்கொல்லித் தொழிலாக இருக்கும்போல... இப்போ ரேடியோவில சொன்னாங்க... யாழ்ப்பாணத்தில் நடக்கிற யுத்தத்தில விமானம் வெடிச்சு ஆர்மிக்காரங்களோட சேர்த்துக் கொழும்பு பேப்பர்க்காரஙக மூன்று பேரும் கொல்லப்பட்டிருக்காங்களாம்... பேப்பர்காரங்கள இனந்தெரியாத யார் யாரோ கடத்திப் போற்தாகவும் ஸ்கூல் பிரின்சிபால் வேற வாப்பாக்கிட்ட சொல்லியிருக்கிறாரு. பயமாயிருக்குடா... பயங்கரமான தொழிலாக இருக்கும்போல... வேணாம்டா இந்தத் தொழில்... உயிர் கொல்லித் தொழில் வேணாம். உனக்கு வேறு ந்ல்ல தொழில் கிடைக்கும்... இந்தத் தொழில் வேணாம்டா மவன்... வேணாம் விட்டுடு..."
உம்மா சேலைத்தலைப்பை வாயில் புதைத்து அழத்துவங்க,
நான் எதுவுமே புரியாமல்...
_மயக்கத்துக்குப் போ...னே....ன்.
- நிறைவு -
- ரிஸ்கி ஷெரீப்,
இலங்கை
09-05-1995
No comments:
Post a Comment