
நிர்மலா டீச்சரால் நம்ப முடியவில்லை.
-டீச்சர் அப்படியே விக்கித்து உறைந்து போகின்றாள்.
-டீச்சர் அப்படியே விக்கித்து உறைந்து போகின்றாள்.
இருபத்தியெட்டு வ்யதுக்குள் இருந்த - ஷோபாவை ஞாபகப்படுத்தும் செழுமையான மெழுகுபொம்மையுடல் வியர்வையில் நனைந்து....உடம்பில் இலேசாக நடுங்கினாள்.
மரணபயம் விசுக்கென்று நரம்பு நாளங்களில் ஊடுருவி...வாய்க்குள் எச்சில் விழுங்க மறுத்தாள்.
''வாசுகி டீச்சருக்கு ஏய்ட்ஸா?''
நிர்மலாவினால் ஜீரணிக்க முடியவில்லை.
பக்கத்தில் இருந்த.சக ஆசிரியைத் தோழி மாலதியிடம் கேட்கிறாள்.நிர்மலாவினால் ஜீரணிக்க முடியவில்லை.
"நீ சொல்றது உண்மையா மாலதி...?"
"நான் ஏன் பொய் சொல்றேன் நிர்மல்...திடீர்னு காய்ச்சலடிச்சு...அடங்காத நிலையில செக் பண்ணினப்பதான் சடென்லியா எச்.ஐ.வீ பாசிட்டீவ்னு கண்டுபிடிச்சிருக்காஙக.என்னாலேயும் நம்ப முடியல..."என்ற் மாலதியின் கண்களில் நீர் கசிய...
நிர்மலாவின் தலைக்குள் யாரோ சம்மட்டியால் அடித்தார்கள். முதுகு முள்ளந்தண்டில் பழுக்கக் காய்ச்சிய இரும்புப் பாளத்தை வைத்து உராய்ந்தார்கள்....அப்படியொரு வேதனை.
தன் வயதையொத்த தோழி...சக ஆசிரியை...நேற்றைவரைக்கும் நொறுக்குத்தீனியோ கொய்யாப்பழமோ எச்சில்படக்கடித்து பரிமாறித் தின்றவர்கள். கலகலப்புக்குச் சொந்தக்காரிகள். இன்று...ஒருத்திக்கு ஏய்ட்ஸ்...இது எப்படி சாத்தியம்?
மீண்டும் கேட்கிறாள் நிர்மலா.
"எப்படி மாலதியிது... சான்சேயில்லையே...தப்பாத் தொட்டுக்கிறத கனவிலேயும் நினைக்காத சுத்த சைவம்பா அவள். அப்படியிருக்க எப்படி?"
அவளால் பேச முடியவில்லை.தொண்டை அடைக்கிறது.
"வாசுகியோட புருஷன் சுவிட்சர்லாந்தில வேலைக்குப் போனப்போ சில சிவப்பான ஏரியாக்களில நுழைஞ்சிருக்கார்போல...அவர் திரும்பி வந்தும் கொஞ்சம் காலமாயிட்டுது. அவர் மூல்மா இவளுக்கு வந்திருக்கலாம்னு டாக்டர்ஸ் சொல்றாங்க நிர்மல்..."
நிர்மலாவினால் தாங்க முடியாமல் பக்கென்று அழுகை வெடிக்கிறது.அடக்க முயன்று தோற்றுப்போகிறாள்.விம்மி விம்மி அழுகிறாள்.கூடவே மாலதியும்.
.................... ---------------- ......................
சில மாதங்களுக்குப் பிறகு,
'சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்'
- வானொலியில் பீ. சுசீலா தேன்கசியப் பாடிக்கொண்டிருக்க...
அயர்ச்சியாய் வந்த நிர்மலா வானொலியின் வால்யூமைக் குறைத்துவிட்டு அப்படியே கட்டிலில் சரிந்தாள்.வியர்வை கசகசத்தபோதும் உடை மாற்ற வேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை.மனதுக்குள் ஒரு பூகம்பம் வெடித்துச் சிதறியிருந்தது.
வாசுகியின் ஈமக்கிரியைகளில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிய பின்பும் நெஞ்சு முழுக்கப் பரவிய வலி இன்னமும் அப்படியே வியாபித்துத்தானிருந்தது.
வாசுகி இவ்வளவு சீக்கிரம் மரணித்துப் போவாள் என்று நிர்மலா
எதிர்பார்த்தாளா என்ன?
எதிர்பார்த்தாளா என்ன?
ஏய்ட்ஸின் மரண அவஸ்த்தை இத்தனை கொடூரமா?
படிப்படியாக ஒன்று விட்டு ஒன்று...இரண்டு அவல மரணங்கள்.
எச்சில் பெண்களைத் தொட்டுவந்த குற்றத்திற்கான தண்டனைதான் வாசுகியின் கணவனுக்கு நேர்ந்த இந்த அவல மரணமென்றால்...சரி ஏதுமறியாத வாசுகி என்ன பாவம் செய்தாள் இறைவனே...
வாசுகியின் கணவன் மரணித்துச் சரியாக இரண்டாவது மாதம் வாசுகியும் மரணித்துப்போக...
ஒரே பாடசாலையின் சக ஆசிரியைகள் யதார்த்தமாகக் குழம்பித்தான் போனார்கள். அதிலேயும் நிரம்பவும் குழம்பினவள் நிர்மலாதான்.
குழப்பம்,களைப்பு,சோர்வு மற்றும் மனதில் ரணங்களோடு...
குழப்பம்,களைப்பு,சோர்வு மற்றும் மனதில் ரணங்களோடு...
நிர்மலாவைப் பெற்ற மரகதம் ஆவிபறக்கும் தேநீரோடு வருகிறாள்.
"நிர்மலா..."
"ஏன்மா?"
"டீ சாப்பிடும்மா...""ஏன்மா?"
"பசிக்கலம்மா..."
மரகதம் தேநீர்க் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, கட்டிலில் மகளின் அருகே வந்தமர்கிறாள்.
" நிர்மலா... மவள்..."
நிர்மலா சுருதியேயில்லாமல் பார்க்கிறாள்." நிர்மலா... மவள்..."
" உனக்குப் பார்த்த வரன் சரிவரும் போல இருக்கு. நல்ல இடம்கிறாங்க.. ரொக்கம், சீதனம் எதுவும் மாப்பிள்ளை வீட்டார் எதிர்பார்க்கலயாம்.. மாப்பிள்ளை எஞ்சினியருக்குப் படிச்சிருக்காரு... தவிர லண்டன்ல இருந்து வந்து ரெண்டு மாசமாம்... கல்யாணத்தை அவசரமாக முடிக்கணும்னு அப்பா சொல்றாரு. அதான் ஜாதகம் பார்த்திடலாம்னு போயிருக்காரு... நீ என்ன சொல்றே மவள்..."
நிர்மலாவுக்கு விக்கென்றது.
- மவுனமாயிருந்து பின் சொன்னாள்.
" ஜாதகம் பார்க்கிறதெல்லாம் முக்கியமில்லம்மா. ஆனால் அதற்கு முன்னால புதிசாயொரு பொருத்தம் பார்க்கணும்மா. ரெண்டு பேரோடையும் வாழ்க்கைய ஜாதகப் பொருத்தம்தான் நிர்ணயிக்கிறது என்கிறது அந்தக் காலம்மா. ஆனால் இப்போ எல்லாம் மாறிடுச்சு. முதல்ல... மாப்பிள்ளையோட ரத்தம் செக் பண்ணி மெடிக்கல் ரிப்போர்ட் கொண்டுவரச் சொல்லுங்க... அப்புறம்தான் ஜாதகமெல்லாம்."
மரகதம் புரியாமல் பார்க்கிறாள்.
"என்ன மவள் சொல்றே?"
"என்ன மவள் சொல்றே?"
" மாப்பிள்ளைக்கு ஏய்ட்ஸ் இருக்கா இல்லையான்னு பார்க்கணும். ஏன்னா இது கலியுகம் மாதிரி...வேற வழியில்லம்மா."
- மரகதத்துக்குப் புரிய ஆரம்பிக்கிறது.
- நிறைவு -
- ரிஸ்கி ஷெரீப்,
இலங்கை
03-06-1995
No comments:
Post a Comment